இணையத்தில் ஆங்கில மெய்ப்பு பார்த்தல் மற்றும் திருத்தச் சேவைகள்
உங்களுக்குப் பிழையில்லாத ஆங்கிலம் வேண்டுமா?
உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது ProofreadingServices.com . இணையம்வழியே ஆங்கில மெய்ப்பு பார்த்தல் மற்றும் திருத்தச் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமாகிய நாங்கள், 90 நாடுகளில் இயங்கிவருகிறோம், கல்வியாளர்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் எழுத்தாளர்களுடன் பணியாற்றுகிறோம். உங்களுக்கு ஆங்கிலக் கல்வி ஆவணங்களை மெய்ப்பு பார்க்கவேண்டியிருந்தாலும் சரி, தொழில் ஆவணங்களை மெய்ப்பு பார்க்கவேண்டியிருந்தாலும் சரி, இலக்கிய மூலப்பிரதியின் மெய்ப்பு பார்க்கவேண்டியிருந்தாலும் சரி, ஆங்கில விவரக்கோப்பை மெய்ப்பு பார்க்கவேண்டியிருந்தாலும் சரி, எங்களை அணுகுங்கள்; எங்கள் குழுவில் உள்ள விருது பெற்ற மெய்ப்பு பார்ப்பவர்கள் உங்களுக்குத் தேவையான ஆங்கில திருத்தங்களை வழங்குவார்கள்.
நீங்கள் தொழில் அல்லது கல்விச் சூழலில் எப்படி மதிப்பிடப்படுகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது, உங்கள் எழுத்தின் தரம். சரியான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களைத் தயாரிப்பதன்மூலம் உங்கள் துறையில் உங்கள் நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம். எங்கள் தொழில்முறை ஆங்கில மெய்ப்பு பார்ப்பவர்கள் இலக்கணம், எழுத்து, வடிவம், சொல் தெரிவு, சொற்றொடர் அமைப்பு, மற்றும் பலவற்றில் பிழைகளைக் கண்டறிகின்றனர். நாங்கள் உங்கள் ஆங்கில எழுத்தைச் சரி செய்து, உங்கள் படைப்புகளுக்கு மதிப்பைப் பெருக்குகிறோம். 1}
உங்களுக்கான சிறப்பு ஆங்கில மெய்ப்பு பார்ப்பு மற்றும் திருத்தச் சேவைகள்
இதைக் கற்பனை செய்யவும்: நீங்கள் பல மணி நேரம் செலவிட்டு ஓர் ஆங்கிலக் கட்டுரையை எழுதியுள்ளீர்கள், அதனை ஒரு முன்னணிக் கல்வி ஆய்விதழில் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள். அப்போது உங்கள் ஆங்கிலப் படைப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்கள் கல்விச் சகாக்கள் முன்பு நீங்கள் அவமானப்பட நேரலாம். கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கான கெடு நேரம் விரைவாக நெருங்கிக்கொண்டிருக்கிறது – இன்னும் 48 மணிநேரங்கள்தான் உள்ளன. உங்களுக்கு உதவி தேவை, அதுவும் விரைவாகத் தேவை..
இந்த சூழ்நிலை எவ்வளவு மன அழுத்தம் தருவது என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை அனுபவித்துள்ளோம். எனவேதான் நாங்கள் எங்கள் சேவைகளை எவ்வளவு வசதியாக இருக்க முடியுமோ அவ்வளவு வசதியாக வடிவமைத்துள்ளோம். உங்கள் ஆவணம் சில நாட்களில் வேண்டுமா? சில மணி நேரங்களிலா? பிரச்னையே இல்லை, நாங்கள் அதைக் கச்சிதமாகச் செய்வோம்.
உங்கள் ஆவணத்தை எங்களுக்கு அனுப்புங்கள், கவலையை விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
→ [மெய்ப்பு பார்த்தல் மற்றும் திருத்தச் சேவைகளை இங்கே ஆர்டர் செய்யவும்.]
குறிப்பு: நாங்கள் மொழிபெயர்ப்புச் சேவைகளும் வழங்குகிறோம். நீங்கள் மொழிபெயர்ப்புச் சேவைகளை இங்கே ஆர்டர் செய்யலாம்.
எங்களுடைய ஆங்கில மெய்ப்பு பார்ப்புக் குழுவின் சிறப்பு
எங்களுடைய நிபுணத்துவம் பெற்ற மெய்ப்பு பார்ப்பவர்கள் மற்றும் திருத்துபவர்கள், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசுகிறவர்கள், தொழில்முறையில் எழுதுதல், திருத்துதல், மற்றும் மெய்ப்பு பார்ப்பதில் ஈடுபடுகிறவர்கள். இவர்களில் பலர், பல ஆண்டு அனுபவம் கொண்ட, உயர் கல்வி ஆய்விதழ்களுக்குக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் ஆங்கில மற்றும் அறிவியல் பேராசிரியர்கள். எங்கள் குழுவின் ஒவ்வோர் உறுப்பினரும் கடுமையான தொடர் மெய்ப்பு பார்ப்பு மற்றும் திருத்த்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாங்கள் 300 ஆங்கில மெய்ப்பு பார்ப்பு விண்ணப்பதாரர்களிலிருந்து ஒருவரைதான் தேர்ந்தெடுக்கிறோம் – எங்கள் குழுவில் இணைவது ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இணைவதைவிடவும் சிரமம். ஆகவே, எங்களுடைய மெய்ப்பு பார்ப்பவர்கள் தங்கள் அணியில் மிகச் சிறந்தவர்கள், உங்கள் ஆங்கிலப் படைப்புகளை நன்கு திருத்துபவர்கள்.
இலவச ஆங்கில மெய்ப்பு பார்ப்பு மாதிரி வேண்டுமா?
அமெரிக்காவிலுள்ள எங்களுடைய தலைமையகத்திலிருந்து நீங்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம், எங்கள் வேலையை மாதிரி பார்க்க விரும்பலாம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்களுடைய தொழில்முறை மெய்ப்பு பார்ப்பவர்கள் உங்கள் எழுத்தை எப்படி மேம்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க, ஓர் இலவச மாதிரியைப் பெறவும்.
→ [இப்போதே இலவச மெய்ப்பு பார்ப்பு மாதிரியைப் பெறவும்.]
குறிப்பு: எங்களுடைய வலைத்தளத்தின் மற்ற பகுதிகள் ஆங்கிலத்தில் உள்ளன. அதுதானே எங்கள் நிபுணத்துவ மொழி!
எங்களுடைய ஆங்கில மெய்ப்பு பார்ப்பவர்கள் மற்றும் திருத்துபவர்களுடன் பணியாற்றத் தயாரா?